3 9
ஏனையவை

திரைமறைவில் அரசியல் செய்யும் அநுர! கனவில் வந்து போகும் நாமல், மகிந்த

Share

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி ராஜபக்சர்களை சிறையில் அடைக்கும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெல்மதுல்ல போபிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே நாமல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உலகம் முழுவதும் பயணம் செய்து திரும்பி வருவதில் பயனில்லை. நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச மாநாடுகளுக்கு செல்ல வேண்டும்.

நாங்கள் அவர்களின் மனநிலையில் இல்லை. ஆனால் நாம் ஒரு சர்வதேச மாநாட்டிற்குச் செல்லும்போது, ​​அந்த நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போது, ​​அவர்களிடமிருந்து நாம் பெறும் நன்மைகள் குறித்தும் பேச வேண்டும் என நாமல் தெரிவித்துள்ளார்.

திருடர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு கடையை மூட வேண்டாம். சில நாடுகளுடன் அரசாங்கம் மோசடி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர் அதனை தவிர்த்து வருகிறது. கொடுக்க முடியாது என்றால் ஏன் அந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும் என நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமகால அரசாங்கம் திரைமறையில் அரசியல் செய்வதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தால் வேலை செய்ய முடியாத போது, ​​ எமது வாயை மூடவும், சிறைகளை காட்டவும், நம் வாழ்க்கையை அழிக்கவும் அரசாங்கம் முயற்சிக்கிறது.

அவர்களுக்கு பயந்து நாம் அரசியல் செய்வதில்லை. பொய்யான ஆதாரங்களை உருவாக்கி நம்மை சிறையில் அடைக்க முயன்றாலும், அது வெற்றி பெறாது.

ஏனென்றால், நம் மனசாட்சிப்படி நாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது நமக்குத் தெரியும். அதனால்தான் நாம் சவால் விடுக்கிறோம். எம் மீது குற்றங்கள் இருந்தால் பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்துங்கள். தேவையற்ற விரல் நீட்டுவதை நிறுத்துங்கள் என நாமல் கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கம் நாளாந்தம் கனவு கண்டு வருகிறது. அதில் நானும் எனது தந்தையும் அடிக்கடி வந்து செல்கின்றோம் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1 9
ஏனையவை

ஸ்டாலினின் அரசியல் நாடகம்.. கச்சத்தீவு ஒரு சாக்கு.. அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

கரூர் விவகாரத்தில் தனது அரச நிர்வாகத் தோல்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, கச்சத்தீவை மீட்பது பற்றிப் பேசுவதன்...

5
ஏனையவை

கரூர் சம்பவம்.. இரவுக்குள் கைது? விஜய்க்கு வந்த சிக்கல்

கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் அரசியல் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மற்றும் கரூருக்கு சென்று...

6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...