9 2
இந்தியாசெய்திகள்

கேப்டன் விஜயகாந்த் போன்று விஜய்யை வீழ்த்த வகுக்கப்பட்டுள்ள சதி..!

Share

அனைத்து அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த விடயத்தை அதிகம் பேசி மக்கள் மத்தியில் பிரபலமடைய முயன்று வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு எவ்வாறான சதி முயற்சிகள் மேற்கொண்டு, அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டரோ அதேபோன்றதொரு நிலையை தவெக கட்சியின் தலைவர் ஜோசப் விஜயிற்கும் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவரான கேப்டன் விஜயகாந்த், அப்போது பிரதான அரசியல் கட்சிகளுக்கு பெரும் சிம்மசொப்பனமாக செயற்பட்டார்.

திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பிரதான கட்சிகள், விஜயகாந்தின் எழுச்சியால் கலக்கம் அடைந்திருந்தன.

தமிழகத்தின் அடுத்த முதல்வராக விஜயகாந்த் வருவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்த நிலையில், அவரை வீழ்த்த பல்வேறு வியூகங்களை இந்த இரண்டு பிரதான கட்சிகளும் மேற்கொண்டன.

அதற்கு பிரதான வழிமுறையாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விஜயகாந்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை உடைக்க செய்ய முயற்சித்தனர்.

அதற்காக சமூக ஊடகங்களில் பெருந்தொகை பணம் செலவு செய்து அதற்காக பல குழுக்கள் களமிறக்கப்பட்டன. தொலைக்காட்சிகளில் விஜயகாந்த தொடர்பான அவதூறு பரப்பும் வகையிலான காட்சிகளை ஒளிபரப்பு செய்யப்பட்டன.

சமூக ஊடகங்களில் விஜயகாந்த தொடர்பான வசைபாடல்கள், அவருக்கு பாரிய பின்னடைவை கொடுத்தது. அண்ணா திராவிடக முன்னேற்ற கழக ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்ட விஜயகாந்த், அப்போதைய ஜெயலலிதா அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் அ.தி.மு.க மற்றும் தி.மு.கவின் சதியால் விஜயகாந்த் என்ற பெரும் இயமம் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட்டார். அதனால் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

கேப்டனின் மறைவின் பின்னரே அவருக்கு எதிராக அரசுகள் மேற்கொண்ட சதி நடவடிக்கை குறித்த மக்கள் தெளிவடைந்தனர்.

சமகாலத்தில் அரசியலில் பிரவேசித்துள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு ஏற்பட்டுள்ளமை தி.மு.க அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதன் காரணமாக விஜயை வீழ்ந்த சமூக வலைத்தளங்களில் வசைபாடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக சமூக வலைத்தளங்களில் பிரபலமான நபர்களுக்கு பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்டு விஜய்கு அவதூறு பரப்பும் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கரூர் பகுதியில் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக குழந்தைகள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை சமகால அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் விசாரணை ஆணைக்குழுவினால் இதுவரை உறுதிப்படுத்திய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த அசம்பாவிதத்தினை பயன்படுத்தி விஜயை அரசியலில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் சமகால அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
18 1
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதை பொருள் கடத்தலில் ஜே.வி.பிக்கும் தொடர்பு! அதிர்ச்சி கொடுத்த விமல் வீரவன்ச

தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க...

17 1
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது...

16 1
இலங்கைசெய்திகள்

ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள்....

15 1
இந்தியாசெய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம்! வெளியான தகவல்

கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு...