கரூர் துயர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்து கவிஞர் வைரமுத்து இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இது தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை கவிதை வடிவில் எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “தாங்க முடியவில்லை; இரவு என்னால் தூங்க முடியவில்லை மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது.
அந்த மரணங்களுக்கு முன்னும் பின்னுமான மனிதத் துயரங்கள் கற்பனையில் வந்து வந்து கலங்க வைக்கின்றன பாமரத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா?
இந்த வகையில் இதுவே கடைசித் துயரமாக இருக்கட்டும். ஒவ்வோர் உயிருக்கும் என் அஞ்சலி; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்.
இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வதே இந்த நீண்ட துயரத்துக்கு நிரந்த நிவாரணம் ஆடும் உடம்பு அடங்குவதற்கு நாளாகும்” என கூறியுள்ளார்.