6
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அதிரடி தீர்மானம்! அடுத்தக் கட்ட நகர்வுக்கு தயாராகும் அரசாங்கம்

Share

அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் மேலும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இலங்கை தனது உத்திகளுக்கான இலக்குகளை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா வரிகளை 20% ஆகக் குறைத்தது குறித்து இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் பிராந்தியத்தில் உள்ள போட்டியாளர்களுடன் ஒப்பிடக்கூடிய வரி விகிதத்தைப் பெறுவதாகும். பல்வேறு துறைகளில் இலங்கையின் சந்தைப் பங்கைப் பராமரிக்க இது அவசியம்.

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது, வர்த்தகத்துக்கு தடங்கலாக இருக்கும் பெரா-வரி கட்டணங்களை குறைப்பது மற்றும் அமெரிக்க வழங்குநர்களுக்கு போட்டி சந்தை அணுகலை வழங்குவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செயல்படுத்தும் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, (National Single Window) ‘தேசிய தனியாக பாதையை’ செயல்படுத்துவது உட்பட வர்த்தக வசதிப்படுத்தலுக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....