2 18
உலகம்செய்திகள்

அணுதளங்களில் மீண்டும் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்த ஈரான்!

Share

அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஃபோர்டோ அணுசக்தி மையத்தில் மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்மதி படங்களில் மண்ணை அகற்றும் இயந்திரங்கள், சுரங்கப்பாதைகள் அருகே நடவடிக்கைகள், மற்றும் பணிகளுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் ஆகியவை காணப்பட்டுள்ள நிலையில் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானின் ஃபோர்டோ (Fordow) அணுசக்தி மையம், தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில், மலைப்பகுதியில் நிலத்தடியில் அமைந்துள்ள முக்கியமான யுரேனியம் செறிவூட்டல் தளமாகும்.

2025 ஜூன் 22 அன்று, அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் விமானங்கள் மற்றும் GBU-57 பங்கர் பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி ஃபோர்டோ உள்ளிட்ட மூன்று அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து நடத்தப்பட்டவையாகும், ஆனால் சேதத்தின் அளவு குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் தனது அணுசக்தி தளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறித்த செய்மதி படங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த மீள் கட்டுமான முயற்சிகள், ஈரானின் அணுசக்தி திட்டங்களை மீண்டும் தொடர விரும்புவதாகவும், தாக்குதல்களால் தடைபடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தெஹ்ரான் செயல்படுவதாகவும் கருதப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...