25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

Share

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே 1ம் தேதி வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். இப்படத்தில் ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது.

இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் இறுதியாக ரூ. 91 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் ரூ. 67 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 15 கோடி வசூல் செய்து 2025ம் ஆண்டு ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது.

 

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...