11 8
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்! தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி

Share

இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம்(29) பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பல குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அதில், ஒரு சிறு குழந்தையின் எலும்புக்கூடு நீல நிற பை மற்றும் சில உடை துணிகள் உடன் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளைய தினம் திங்கட்கிழமை காலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...