2 16
இலங்கைசெய்திகள்

மாவனல்லையில் மற்றுமொரு கோர விபத்து! இருவர் காயம்

Share

மாவனல்லைப் பிரதேசத்தில் மற்றுமொரு பேருந்து – லொறி விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவனல்லை, கொழும்பு – கண்டி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொழும்பில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து வண்டியொன்றும், மாவனல்லையில் இருந்து கேகாலை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் பயணித்த திப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று அதிகாலை மாவனல்லை பிரதேசத்தில் இரண்டு லொறிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...