Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

மீண்டும் திரைக்கு வந்த “தடையற தாக்க”…!பல நினைவு கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி…!

Share

தமிழ் திரையுலகில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “தடையற தாக்க” திரைப்படம், ரசிகர்களின் மனங்களில் ஒரு தடம் பதித்த படம். இன்று, அந்தச் சிறப்பு படைப்பு திரும்பி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இது வெறும் மீள்வரவில்லை அது ஒரு திரை பிரேமிகளுக்கான விழாக்காலம் என்றே சொல்லலாம். மேலும் இந்த படத்தினை பார்வையிடுவதற்கு திரையரங்கிற்கு வருகை தந்திருந்தனர். அங்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல விடயங்கள் பற்றி கூறியுள்ளனர் படக்குழுவினர்.

படம் மீண்டும் ரீஷூடு செய்யப்பட்டது என்பது ஒரு சாதாரண நிகழ்வாக மட்டும் இல்லாமல், படத்தின் மீதான நம்பிக்கையை காட்டும் ஒரு வெளிப்பாடு. “இந்த படம் ரீஷ்ஷாவே இருக்கு!” எனக் கூறியபடி, நடிகர் உணர்வுடன் தெரிவித்துள்ளார். இந்த ரீஷூட் அனுபவமும், முழு குழுவின் ஒற்றுமையும், படத்தின் மீதான அன்பும் இதை மீண்டும் பெரிய திரையில் கொண்டு வந்திருக்கின்றன

திருப்பி ஒரு ஆப்பர்சுனிட்டி கிரியேட் பண்ணி, திருப்பி ஆடியன்ஸ் வந்து தியேட்டர்ல இத எக்ஸ்பீரியன்ஸ் பண்றதுக்காக இந்த முயற்சி எடுத்தோம்” என்கிறார்கள் படக்குழு. இதற்காக டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் செய்த சேவைக்கு, அவர்கள் மனதார நன்றியை தெரிவித்துள்ளனர். மேலும் படம் ஒரு சாதாரணமான வெற்றி அல்ல, மொழி கடந்து ஜெயித்த படம். தெலுங்கிலும் இந்த படத்தை உருவாக்க முயற்சி நடந்தது. பிரபுதேவா மாஸ்டர் கூட இந்த படத்தை ஹிந்தியில் ஒரு பெரிய நடிகருடன் இயக்க முயற்சி செய்ததாக கூறியிருந்தார்.

இயக்குநரிடம் AK அவர்களோடு ஒரு புதிய கூட்டணியாக இணைவதற்கான வாய்ப்பு குறித்து பேசியபோது, “அப்படி ஒரு வாய்ப்பு வந்தா, வேணாம் என்று சொல்லக்கூடிய இயக்குனர் இருக்க முடியுமா?” என அவர் சந்தோஷமாக தெரிவித்தார். “அந்த காம்போவை நாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருக்கோம்!” ரசிகர்களிடமிருந்து வரும் இந்தக் கோரிக்கைக்கு திரையுலகம் இன்னும் ஒரு மாஸ்டர் கூட்டணியை அமையும் என்று எதிர் பார்க்கின்றது.

“தடையற தாக்கு “என்பது வெறும் திரைப்படமல்ல அது ஒரு காலத்தை கடந்து மக்கள் மனங்களில் பதிந்த நெஞ்சசுவாசம். இப்போது, இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் ஒலிக்கப்போகிறது என்பது ரசிகர்களுக்கான திருவிழாவாகத்தான் . திரும்பிப் பார்க்க மறந்திருந்த “தடையற தாக்கு”யை, இப்போது ஒரு புதிய பரிமாணத்தில் பார்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...