3
இலங்கைசெய்திகள்

அம்பகமுவ பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்

Share

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சத்தியின் உறுப்பினர் கபில நாகந்தல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாம் கன்னி அமர்வு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து தலைமையில் இன்று (26) அம்பகமுவ பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது 21 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் திறந்த வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றதுடன் உப தலைவர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டது.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றதில் 11 வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாகந்தலாகே தொன் கபில நாகந்தல தலாவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 06, ஐக்கிய தேசிய கட்சி 01, ஈரேஸ் ஜனநாயக முன்னணி 01, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன 01, சர்வஜன அதிகாரம் 01, சுயேற்சைக்குழு 01 என 11 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சார்பில் அமரசிங்க வசந்த பிரியதர்சன போட்டியிட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 08, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 02 வாக்குகள் என 10 வாக்குகளை பெற்றார்.இலங்கை விடுதி

உப தவிசாளர் தெரிவிற்கு இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக ஆதரவு கிடைத்த நிலையில் இரகசிய வாக்கெடுப்பில் சுயேட்சைக்குழு உறுப்பினர் விதான கமகே ஹெலப்பிரிய நந்தராஜ் தேசிய மக்கள் சார்பில் உடகெதரலாகே முதியான்சலாகே ஹரிந்த ஆசிரி உடகே ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இதன் போது தேசிய மக்கள் சக்தின் உறுப்பினர் 12 வாக்குகளை பெற்று உப தலைவராக தெரிவானர்.

சுயேட்சைக்குழு உறுப்பினர் நர்ந்தராஜ் 07 வாக்குகளை பெற்றதுடன் இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக கணிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...