7 9
இலங்கைசெய்திகள்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

Share

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில், கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவி விடுதலை செய்யப்பட்ட தகவலும் சேர்ந்துள்ளது.இலங்கை உணவகம்

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உப்புல்தெனியவின் வழக்கு விசாரணையின்போதே இந்த தகவலை சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக இரண்டு பெண்களைக் கடத்தி கொலை செய்ததற்காக குறித்த அமைச்சரின் மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி மன்னிப்பின்கீழ் அவர், 2009இல் விடுவிக்கப்பட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...