10 5
இலங்கைசெய்திகள்

நானுஓயாவில் தேயிலையுடன் குடைசாய்ந்த லொறி: இருவர் படுகாயம்

Share

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா ஒலிபண்ட் தோட்டத்தில் இருந்து நானுஓயா சமர்செட் தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி தேயிலை கொழுந்துடன் விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்துக்குள்ளான லொறி மீட்கப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறியை செலுத்திய சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...