10 3
உலகம்செய்திகள்

ஈரானின் அணு வசதி சேதம்: செயற்கைக்கோள் படங்களின் அதிர்ச்சி வெளிப்பாடு

Share

ஈரானின் ஃபோர்டோ அணுமின் நிலையத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதலின் ஆழமாகப் புதைக்கப்பட்ட தளமும் அது வைத்திருந்த யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்குகளும் கடுமையாக சேதமடைந்து அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதை செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் இது தொடர்பிலான உறுதிப்படுத்தல் எதுதனையும் அணு ஆயுத நிபுணர்கள் வெளியிடவில்லை.

இந்த தாக்குதலுக்கு “மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்” பதுங்கு குழியை தாக்கும் குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதன்படி இவ்வாறான பதுங்கு குழியை உடைக்கும் குண்டுகள் மலைக்குள் ஊடுருவியதாகத் தோன்றும் ஆறு துளைகளை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

பின்னர் தரை கலங்கி, தூசியால் மூடப்பட்டதாகத் செயற்கைக்கோள் படங்கள் மூலம் காட்டப்படுகிறது.

ஆனால் நிலத்தடி அழிவை உறுதிப்படுத்த முடியவில்லை என்று செயற்கைக்கோள் படங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கப் படைகள் நேற்று நடத்திய தாக்குதல்களில் இருந்து ஈரான் அதன் அணுசக்தித் திட்டத்தின் பெரும்பகுதியை பாதுகாக்க ஃபோர்டோவில் உள்ள ஒரு மலையின் நிலத்தடியில் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளன.

ஆனால் அதன் வசதிகள் மற்றும் உபகரணங்களை முற்றிலுமாக அழிக்கத் தவறினால், அமெரிக்க உளவுத்துறை மற்றும் ஐ.நா. சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) 2003 இல் மூடப்பட்டதாகக் கூறும் ஆயுதத் திட்டத்தை ஈரான் எளிதாக மீண்டும் தொடங்க முடியும்.

இந்நிலையில் ஈரான் நீண்ட காலமாக தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காகவே என்று வலியுறுத்தி வருகிறது.

எனினும் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் தெஹ்ரானின் நடான்ஸில் உள்ள முக்கிய யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தையும் குறிவைத்ததாகவும், நாட்டின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இஸ்ஃபஹானைத் தாக்கியதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது.

எவ்வாறாயினும் ஈரானுடனான 10 நாள் போரில் இஸ்ரேல் ஏற்கனவே நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி மையத்தைத் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...