25 684a49556eeda
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதிக்கவுள்ள நுகர்வோர் சங்கம்

Share

Electricity Tariffs By 15 Is Unjustified Eca
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் (ECA) அறிவித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வை கடுமையாக எதிர்ப்பதாகவும், இது நியாயமற்றது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ‘நியாயமான செலவுத் தொகை’ என்ற கொள்கையை சரியாக பின்பற்றியிருந்தால், இந்த உயர்வு சாத்தியமே இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 15 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சாரசபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த முடிவை எங்களது சங்கம் வலுவாக எதிர்க்கிறது. எதிர்வரும் நாட்களில் மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம், என மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.

மின்சார சபை (CEB) களவாடப்பட்ட, தவறான தரவுகளை பயன்படுத்தி அதிக செலவுகளை சுட்டிக்காட்டி கட்டண உயர்வை நியாயப்படுத்த முயன்றது.மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு நாட்டின் நலனுக்கோ, மக்களின் நலனுக்கோ அல்ல எனவும் இது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அழுத்தத்தால் எடுக்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு, மின்சார கட்டணத்தை 33% குறைக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் கூட வழங்கக்கூடிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...