6 2
இலங்கைசெய்திகள்

மகிந்தானந்தவின் ஜம்பர் விவகாரம்! சபையில் கொந்தளித்த சாமர

Share

நமது நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்க தரப்பினரும் ஜம்பர் அணியவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய நீதியமைச்சரே முதலில் ஜம்பர் அணிவார் என்றும் கூறியுள்ளார்.

கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி மகிந்தானந்த அளுத்கமகேவின் உடை தொடர்பில் செய்திகளில் வெளியாகிய கருத்துக்களை நாடாளுமன்றில் வெளிப்படுத்தும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சபையில் எதேனும் ஒரு உரையை தெரிவித்தால் நீதியமைச்சர் என்ற ரீதியில் அதனை செவிமடுக்க வேண்டும். நீதியமைச்சருக்கான ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டு இவ்வாறு செய்வது நாடாளுமன்ற விதிகளுக்கு முரணானது.

நான் இங்கு யாருடைய பெயரையும் குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை. இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டவேண்டும்.

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சிறையில் அடைக்கப்பட்டமை, அனைத்து தொலைகாட்சிகளிலும், செய்திகளிலும் முக்கிய செய்தியாக வெளியாகியது.

அவருக்கான தண்டனையை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியிருந்தது. ஆனால் அதனை அரசியல் இலாபம் தேடும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில கருத்துக்களை முன்வைப்பது சட்டத்தை மதிக்காத தன்மையை எடுத்துகாட்டுகிறது.

குறிப்பாக அதனை நீதியமைச்சரே கூறுவது நீயாயமான ஒன்றா?

உங்கள் அரசாங்கத்தில் உள்ள முன்னாள் சபாநாயகர் போலியான கல்வி சான்றிதழை வழங்கிய ஒருவர். பின்னர் அதன் உண்மைதன்மைகள் வெளியாகியவுடன் அது பொய் என அவரே ஒத்துக்கொண்டார்.

இந்த குற்றச்செயலுக்கு அவர் ஜம்பர் அணிவது கட்டாயமாக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி திசாநாய ஜம்பர் அணிந்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க ஜம்பர் அணிந்துள்ளார். ஒருநாள் உங்கள் தரப்பில் உள்ளவர்களும் ஜம்பர் அணிவார்கள்.

அது தொலைகாட்சியில் கட்டாயம் ஒளிபரப்பபடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நீதியமைச்சரே நீங்களே முதலில் ஜம்பர் அணிவீர்கள்” என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...