images
இலங்கைசெய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

Share

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது.

இந்நீரினை வெளியேற்றுவதற்காக நேற்று (31) முதல் நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.

அந்தவகையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வான்கதவு ஒன்று நேற்று மாலை முதல் திறக்கப்பட்டிருந்தது.

அத்தோடு காசல்ரீ நீர்த்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...

qWa3tdNG
செய்திகள்உலகம்

ரேபிஸ் பரவுவதைத் தடுக்க ஜகார்த்தாவில் நாய், பூனை, வௌவால் இறைச்சிக்குத் தடை!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்,...