4
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் ஐநாவின் உயர் அதிகாரி.. தொடர் அழுத்தத்தில் அநுர அரசாங்கம்

Share

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதம் அல்லது ஜூலை ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விஜயத்திற்கான உறுதியான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இதன்படி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

கடைசியாக, 2016 பெப்ரவரியில், மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது ஜெய்த் ராத் அல் ஹசைன் ஆணையாளராக இலங்கைக்கு வருகைத் தந்தார்.

இந்தநிலையில், 2022 ஒக்டோபரில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்ட ஒஸ்திரிய நாட்டவரான துர்க்கின் இலங்கை பயணம் முக்கியத்தும் மிக்கமாக அமைந்துள்ளது.

சர்வதேச சமூகத்தால் எழுப்பப்பட்ட மனித உரிமைகள் கவலைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்று இலங்கை அரசாங்கம் தடுமாறும் நிலையில் அவரின் பயணம் அமைகிறது.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...