25 683c090ba0cec
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரைக் கூறி இனவாதம் பேசும் சரத் பொன்சேகா..

Share

வடக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவது தவறான விடயமாகும், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என தெரிவித்துள்ளார்.

அது அரசால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், போரில் உயிரிழந்த தமது உறவுகளையே நினைவு கூருகின்றோம் என அவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகின்றது.

இறந்தவர்களை நினைவு கூருவது தவறில்லை. ஆனால், பிரபாகரன் உயிரிழந்த இடத்துக்கே சென்று, அவர் இறந்த நாளில் அதனைச் செய்வது தவறு.

பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளைக் கௌரவப்படுத்தும் நோக்கில் அவர்களை நினைவு கூருவது தவறாகும். அது தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதப்படும்.

இப்படியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு என வரும்போது வாக்குகளைக் கருத்திற்கொள்ளக்கூடாது. முதுகெலும்புடன் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அண்மைக்காலமாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் இனவாதத்தை பரப்பும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...