7 36
இலங்கைசெய்திகள்

நாளை கஜேந்திரகுமார் – சுமந்திரன் சந்திப்பு

Share

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளையதினம்(30.05.2025) இடம்பெறவுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகளவான வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு தவிசாளர் பதவி வகிப்பதற்கான ஆதரவினை ஏனைய கட்சிகள் வழங்க வேண்டுமென்ற கோட்பாட்டினை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் எம்.ஏ.சுமந்திரனின் அதே கருத்திற்கு அமைவான கருத்தொன்றினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இதற்கு மேலதிகமாக எம்.ஏ.சுமந்திரன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு அடுத்ததாக கணிசமான வாக்குகளைப் பெற்ற கட்சி, உப தவிசாளர் பதவியை வகிக்க முடியும் என்ற கோட்பாட்டினையும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, குறித்த விடயங்கள் தொடர்பாக உள்ளூராட்சி மன்றில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மாத்திரமே நாளைய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
06 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுகாதார சேவைகளைப் பாதிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு: தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் GMOA வலியுறுத்தல்

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்கள் நாட்டின்...

05 16
செய்திகள்இலங்கை

சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் தாக்குதல்: இலங்கை நீதிமன்றத்தின் மனிதாபிமான உத்தரவு

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) விபத்தில்...

04 15
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: மூளையாகச் செயல்பட்டவரின் பெயரை வெளியிடப் போவதாக உதய கம்மன்பில அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரியின் (Mastermind) அடையாளத்தை எதிர்வரும்...

03 16
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மீதான வழக்கு: ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைப்பு!

2022 ஆம் ஆண்டில் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அண்மையில் சட்டவிரோதமாக வீதி நாடகமொன்றை நடத்தி பொதுமக்களுக்கு...