9 32
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தலை முடிந்தால் நடத்திக் காட்டுங்கள்! அநுர அரசுக்கு மொட்டுக் கட்சி சவால்

Share

முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்திக் காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது.

முன்னாள் ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது “அரசின் செயற்பாடுகளால் அதன் வாக்கு வங்கி சரிந்து வருகின்றது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.

வடக்கில் நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில்கூட நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், படையினருக்குரிய கௌரவத்தை இந்த ஆட்சியாளர்கள் வழங்கவில்லை.

நாம் தமிழர்களுக்கு எதிராகப் போர் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு வாழ்வதற்குரிய சூழ்நிலை இருக்கவில்லை. எனவே, மக்களைப் பாதுகாப்பதற்காகவே போர் செய்யப்பட்டு, சுதந்திரம் பெறப்பட்டது.

இந்நிலைமையை அநுர அரசு சீர்குலைக்கக்கூடாது. பொய்களைச் சமூகமயப்படுத்தியதால் ஏற்படும் பிரதிபலன்களை இந்த அரசு விரைவில் உணரும்.”என கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
1727583710 Sanath Jayasuriya L
செய்திகள்விளையாட்டு

சனத் ஜயசூரியவின் அதிரடி முடிவு: 20-20 உலகக்கிண்ணத் தொடருடன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகல்!

எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடரின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தான்...

1767513081 CREW 6
செய்திகள்இலங்கை

4.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்: ஃபிட்ஸ் ஏர் பெண் ஊழியர் கட்டுநாயக்கவில் கைது!

சுமார் 4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகள்...

26 6958360d0ef84
செய்திகள்இலங்கை

தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை: தவறு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது!

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module) தகாத இணையத்தள முகவரி...

AA1TmKIK
செய்திகள்இலங்கை

இலங்கைக் கடற்கரைகளில் கரையொதுங்கும் இந்திய ஏவுகணைப் பாகங்கள்: மட்டக்களப்பில் மற்றுமொரு பாகம் மீட்பு!

இந்தியாவினால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றின் சிதைந்த பாகங்கள் மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியில் இன்று (04)...