2 40
இலங்கைசெய்திகள்

வெற்றி பெற்ற சகல சபைகளையும் ஆளுவோம்! பிரதி அமைச்சர் பிரதீப் சூளுரை

Share

தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற அனைத்து சபைகளிலும் நாம் நிச்சயம் ஆட்சியமைப்போம் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தல் காலத்தில் மொட்டுக் கட்சி, தொலைபேசி கட்சி, யானைக் கட்சி என்பன ஒன்றையொன்று விமர்சித்துக்கொண்டன.

தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றி மீண்டும் ஊழலில் ஈடுபடக் கூட்டுச் சேர்கின்றன.

அந்தக் கட்சிகளின் போலி நாடகம், போலி முகத்திரை மக்களுக்குத் தெரியும். அப்படிச் சபையை அமைத்தால்கூட ஓரிரு வாரங்களுக்குக் கூட சபையை இவர்களால் நடத்த முடியாது.

தவிசாளர், உப தவிசாளர் அதிகாரப் போட்டியிலேயே காலம் சென்றுவிடும். எனவே, தேசிய மக்கள் சக்திதான் ஆட்சி அமைக்கும். தவிசாளர்கூட எமது கட்சியைச் சார்ந்தவரே நியமிக்கப்படுவார்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...