25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

Share

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையிலான ஒரு குழு அரசில் இருந்து வெளியேறுகின்றது என்றும், அநுரவின் ஆட்சி கவிழப் போகின்றது என்றும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் கருத்துரைக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது ஜனநாயக நாடு. மக்கள் ஆணையை மீறி எவரும் நடக்க முடியாது. மக்களை ஏமாற்றி எவரும் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது. மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசு நடக்க வேண்டும். இதை மீறி நடந்த கடந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் புகட்டிய பாடத்தை எவரும் மறக்கமாட்டார்கள்.

அந்தவகையில், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி, மக்களின் அமோக ஆணையுடன் ஆட்சிக்கு வந்தது. மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து நாம் செயற்படுகின்றோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றோம்.

இந்நிலையில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எதிரணியினர் பகல் கனவு காண்கின்றனர். பகல் கனவு ஒருபோதும் நனவாகாது என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்திக்குள் குழப்பம் என்றும், எமது ஆட்சி கவிழப் போகின்றது என்றும் எதிரணியினருக்குச் சார்பான ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

இந்த வதந்திச் செய்திகளை நம்பும் அளவுக்கு மக்கள் முட்டாள்கள் அல்லர். ஊடகங்கள் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். இது தேசிய மக்கள் சக்தி அரசு. மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசு.

எனவே, எந்தவொரு சூழ்ச்சியாலும், வதந்திச் செய்திகளாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...