இந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்ககத்தில் உருவாகி வரும் கூலி வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், ரஜினியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அவர் வேறு யாருமில்லை சின்னத்திரை நடிகர் ராஜ் கமல். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சஹானா என்கிற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். பின் ஆனந்தம், ரோஜா, அபியும் நானும், அம்மன் ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார்.
மேலும் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சாந்தியராகம் மற்றும் ஆனந்த ராகம் சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.