இலங்கையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுகையில்,
இதுவரையில் 450 மில்லியன் டொலருக்கான கடனுறுதிக் கடிதம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதிக்கு, 1 பில்லியன் டொலரை ஒதுக்குவதாக அரசாங்கம் ஏலவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.