7 27
உலகம்செய்திகள்

ஈழத்தமிழர் விவகாரத்தில் பிரித்தானியா – கனடாவிடம் புலம்பெயர் தமிழர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

Share

ஈழத்தமிழர்களுக்கு தமது தாயகத்தில் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் வாழும் தீர்வுக்காக பொது வாக்கெடுப்பை நடத்த பிரித்தானியா, கனடாவும் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் முன்வர வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு நிறைவுதினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நாளையொட்டி தமிழர் பரப்பிலும் உலகலாவிய ரீதியிலும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்த ஆண்டும் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், சுவிஸ் உட்பட பல நாடுகளில் நீதிக்கான பேரணிகள் இடம்பெற்றிருந்தன.

பிர்த்தானியாவில் கடந்த 18ஆம் திகதி அன்று முள்ளிவாய்க்கால் மற்றும் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் மற்றும் உலகத் தமிழர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் நிரந்தர தீர்வையும் வலியுறுத்திய கோரிக்கைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர்.

பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உட்பட சர்வதேச நாடுகள் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் நீதியை பெற்றுக்கொடுக்கும் செயல்பாட்டில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்ட தமிழர்கள் வலியுறுத்தினர்.

அதேவேளை, கடந்த சில நாட்களாக இனவழிப்பை மறைத்து நீதியை மழுங்கச் செய்யும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு தமது கண்டனத்தையும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
20 22
இலங்கைசெய்திகள்

துறைமுக நகருக்கான வரிச்சலுகை: சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம்..!

துறைமுக நகருக்காக வரிச்சலுகைகளை ரத்துச் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

21
இலங்கைசெய்திகள்

தமிழ் – சிங்கள மொழி கற்கை குறித்து கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ்...

18 21
இலங்கைசெய்திகள்

பிரபல நடிகையின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதாள உலகத்தினரின் கைகளில் சிக்கியதாகக்...

17 21
இலங்கைசெய்திகள்

கொழும்பில் சூட்சுமமான முறையில் பெருந்தொகை பணத்தை திருடிய பெண்

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் காசாளராகப் பணிபுரிந்த பெண், அந்த நிறுவனத்தின்...