4 25
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Share

அண்மைக்காலமாக தூதரக அதிகாரிகளை போன்று போலி சமூக ஊடக கணக்குகள் அதிகளவில் உருவாகி வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

சமூக ஊடக பயனாளர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென தூதரகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் அல்லது அதன் பணியாளர்கள் பெயரில் செயல்படும் எந்தவொரு கணக்கையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்பான தகவல்களைத் தேடி வரும் பலரை இலக்காகக் கொண்ட போலி கணக்குகள் வழியாக தவறான தகவல்களும், மோசடி நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகவே இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“நாங்கள் வழங்கும் உண்மை மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற, போலிகளைத் தவிர்த்து நேரடியாக அதிகாரப்பூர்வ மூலத்தையே அணுகுங்கள்” என தூதரகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் சமூக ஊடக கணக்குகளையும் பயன்படுத்தலாம்:

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் வெறும் X தளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கை பராமரிக்கிறார்.

முகநூல் Facebook, இன்ஸடாகிராம் Instagram, டெலிகிராம் Telegram போன்ற தளங்களில் அவரது பெயரில் இயங்கும் எந்தவொரு கணக்கும் தவறானவையாகும் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...