15 20
இலங்கைசெய்திகள்

வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்

Share

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது இந்த நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி முதல் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகனம் பதிவு செய்யும் போது இலக்கத் தகடுகள் வழங்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வாகன இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு அந்த இலக்கத்தை பிரதி செய்து, வாகனத்தில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...