16 13
உலகம்செய்திகள்

பல ஆண்டுகளாக அணையாமல் எரியும் நரக வாசல் : எங்குள்ளது தெரியுமா?

Share

இந்த உலகில் வாழும் மக்களுக்கு “நரகம்” பற்றி நம்பிக்கை உள்ளது. பொதுவாக பாவம் செய்தவர்கள் இறந்த பின்னர் நரகத்திற்கு செல்வார்கள் என நம்பப்படுகிறது.

ஆனால் பூமியில் தான் நரகத்திற்கான வாசல் உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த தீயை யாராலும் அணைக்க முடியாது என கூறப்படுகிறது.

அணையாத நெருப்பு காரணத்தினால் இந்த இடத்தை “நரகத்தின் வாசல்” என அழைக்கிறார்கள்.

ஆய்வுகளின் படி, நரகத்திற்கும் இந்த இடத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை. இடைவிடாத நெருப்பு காரணமாகவே இந்த இடம் நரகத்தின் வாசல் என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் சொர்க்கத்தின் வாசலில் எங்குள்ளது? நெருப்பு ஏன் அணையாமல் இருக்கிறது? என்பதனை பதிவில் பார்க்கலாம்.

பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் புதைந்து கிடக்கும் அபாயங்களையும், ஆபத்துக்களையும் வெளிப்படுத்துகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு மக்களை அச்சமடைய வைக்கிறது.

கடந்த 1971 ஆம் ஆண்டு, சோவியத் பொறியாளர்கள் துர்க்மெனிஸ்தானின் பாலைவனத்தில் இயற்கை எரிவாயு எங்குள்ளது என தேடிக்கொண்டிருக்கும் பொழுது அழிவு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி எரிவாயு நீர்த்தேக்கத்தை துளைத்து விட்டதால் தரையில் இருந்து சுமார் 230 அடி அகலமும் 100 அடி ஆழமும் கொண்ட ஆழமான பள்ளமாக உருவாகியுள்ளது.

இதையடுத்து மீத்தேன் வாயு உடனடியாக காற்றில் கசிய தொடங்கி, நச்சுப் புகை காற்றுடன் கலந்து தீயாக மாறியுள்ளது.

இந்த நரகத்தின் வாசல் பார்ப்பதற்கு ஆபத்தாக இருந்தாலும் துர்க்மெனிஸ்தானின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது ஆண்டுதோறும் சுமார் 10,000 பார்வையாளர்கள் வந்து பார்வையிடுகின்றனர்.

தீப்பிழம்பு நிறைந்த குழி பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் தெரியும். அதிலும் குறிப்பாக இரவில் பாலைவனம் முழுவதும் ஒரு பயங்கரமான ஒளியை பரப்பும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...