இலங்கைசெய்திகள்

பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அரச நிதி.. அதிகாரி ஒருவருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை

Share

தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடமிருந்து பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, ஒரு பிரிவு மேம்பாட்டு அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, தண்டனையை 10 ஆண்டுகளுக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

அத்துடன், குற்றவாளியின் வாக்களிக்கும் உரிமை உட்பட அவரது சிவில் உரிமைகளை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கும் நீதிபதி அறிவுறுத்தினார்.

20,000 ரூபாய் அபராதத்தையும் அவர் குற்றவாளிக்கு விதித்தார். ஒரு அரசாங்க அதிகாரியாக, குற்றவாளியாக காணப்பட்டவர், தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்படக்கூடிய ஒரு பெண்ணிடமிருந்து பாலியல் லஞ்சம் கேட்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதன்போது, குற்றத்தின் தீவிரத்தை எடுத்துரைத்த நீதிபதி, குறைந்த தண்டனைக்கு இடமில்லை என்றும் கூறினார். இந்த சம்பவம் 2015 மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்றது குறித்த அரச அதிகாரி தேவையான நிதி உதவியை அங்கீகரிப்பதற்காக, பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் அவர் அந்தப் பெண்ணை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள ஒரு விருந்தகத்துக்கு அழைத்துச் சென்றார், அங்கு லஞ்ச ஒழிப்பு ஆணையக அதிகாரிகளால் அவர்; கைது செயயப்பட்டார்.

இந்தநிலையில், விரிவான விசாரணைக்குப் பிறகு, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்தே மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு தண்டனையை விதித்தது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...