இலங்கைசெய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு

13 8
Share

முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜே.வி.பி.யின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் குணரத்தினம், தனியாகப் பிரிந்து வந்து முன்னிலை சோசலிசக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியொன்றை ஆரம்பித்தார்.

அக்கட்சி இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

இந்நிலையில், வாக்களிப்பின் பின்னர் வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் முன்னிலை சோசலிசக் கட்சியில் இருந்து கேகாலை மாநகர சபைக்கு ஒரு மக்கள் பிரதிநிதி தெரிவாகியள்ளார்.

கேகாலை மாநகர சபைக்கான தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி 272 வாக்குகளைப் பெற்று இந்த ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் கேகாலை மாநகர சபையில் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சிக்கு தேர்தல் மூலம் முதலாவது மக்கள் பிரதிநிதி தெரிவாகியுள்ளார்.

Share
Related Articles
15 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு பயணிக்கவேண்டாம்; அமெரிக்கா உட்பட நாடுகள் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

இந்தியா நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணிப்பதற்கெதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள்...

12 8
இலங்கைசெய்திகள்

தலைக்கவசம் அணிந்து நடமாடுவோருக்கு எச்சரிக்கை !

உந்துருளிகளில் பயணிக்கும் போது, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களுக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை...

14 8
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று...

11 8
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்

ஊழல் குற்றத்தைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது...