4 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரித்துள்ள மரணங்கள்: வெளியான அதிர்ச்சி காரணம்

Share

இலங்கையில் மது அருந்திய நிலையில், தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை உளவியல் மருத்துவ விஞ்ஞான சங்கத்தின் தலைவர், மருத்துவ நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சுயநினைவற்ற முடிவுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக மக்களுக்குள் தவறான முடிவுகளை எடுக்கும் எண்ணங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறிப்பாக 15 முதல் 19 வயதுக்குள் உள்ள இளைஞர்களை அதிகமாக பாதிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவறான முடிவுள் தொடர்பில் பொறுப்புடன் செய்தி அறிக்கையிடல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வில் உரையாற்றிய அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இந்த செயலமர்வு நடைபெற்றிருந்தது.

உலகளவில் ஆண்டுக்கு 7 இலட்சம் பேர் தவறான முடிவுகளால் உயிரை மாய்த்துக்கொள்வதாகவும், இலங்கை உலக தரவரிசையில் இரண்டாம் நிலைக்கு அருகில் உள்ள நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

“2020 ஆம் ஆண்டில் மட்டும் 1,909 பேர் தூக்கிட்டு தவறான முடிவை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இலங்கையில் ஒவ்வொரு ஒரு லட்சம் மக்களில் 14 பேர் தவறான முடிவை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே ஆண்களில் தவறான முடிவை மேற்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்யும் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக காணப்படுகிறது.

அதே நேரத்தில், தனியாக வாழும் மக்களிடையே தவறான முடிவை மேற்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படகிறது.

திருமணமானவர்களிடையே இது குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள் காண்பிக்கின்றன.

தனிமை உணர்ச்சி, பொருளாதார பிரச்சினைகள், வேலைவாய்ப்பு குறைபாடு, மற்றும் சமூகத்தில் ஏற்படும் விமர்சனங்கள் போன்றவை இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன எனவும் மருத்துவர் சஜீவன அமரசிங்க எச்சரித்துள்ளார்.

சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள் மத்தியில் இற்த சம்பவங்கள்அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டில் 1909 பேர் இலங்கையில் தூக்கிட்டு தவறான முடிவை மேற்கொண்டுள்ளனர் என சஜீவன அமரசிங்க கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...