14 3
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

Share

தற்போதைய கழிவு கொடுப்பனவு நடைமுறையின் கீழ் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இணங்கியுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச (Kumar Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய கழிவு கொடுப்பனவு சூத்திரத்தில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்வதற்குப் பரிந்துரை முன்வைக்கப்படுமாயின் அது தொடர்பாக ஆராயப்படும் என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (04) நடைபெற்றது.

கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) முன்வைத்த புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்திருந்தார்.

மேலும் விநியோகஸ்தர்கள் சமர்ப்பித்த திட்டங்களை மறுஆய்வு செய்ய மார்ச் 18 ஆம் திகதி மற்றொரு கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...