இலங்கைசெய்திகள்

சபையில் எதிர்க்கட்சிகளுக்கு அநுர தரப்பு வழங்கிய சாட்டையடி!

Share
20
Share

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு தொடர்பில் எதிர்க்கட்சிகள் கூறி வந்த விமர்சனங்களுக்கு அரசாங்கம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

இதன்படி, கடந்த 05 மாதங்களில் ஜனாதிபதி அநுர குமார மேற்கொண்ட 03 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபா எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெளிவுபடுத்தியுள்ளார்.

அதன்படி, ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கான விமான பயணச்சீட்டுகளை சீன அரசாங்கம் வழங்கியதாகவும், இந்தப் பயணத்திற்காக ஜனாதிபதி செயலகம் 386,000 ரூபா மட்டுமே செலவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி அநுரவிற்கு விஜயம் செய்ததற்காக வழங்கப்படும் கொடுப்பனவாக 2,055 அமெரிக்க டொலர்கள் கிடைத்ததாகவும், அவை எந்த செலவும் இல்லாமல் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிபிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய விஜயத்தின் போது விமான பயணச் சீட்டுக்காக 3.12 லட்சம் ரூபா மற்றும் இராஜதந்திர நினைவுப் பொருட்களுக்காக ஒதுக்கப்ட்ட பணம் உட்பட 12.20 லட்சம் ரூபா செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி அநுரவின் துபாய் விஜயத்தின் போது, விமான பயணச் சீட்டு அந்நாட்டிலிருந்து பெறப்பட்டதாகவும், கொடுப்பனவாக கிடைத்த 960 அமெரிக்க டொலர்களும், ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்றையதினம் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவும் வெளியிடப்பட்டதுடன், அதன் போது தற்போதைய ஜனாதிபதி அநுரவின் செலவுத் தொகையும் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, அநுரவின் செலவாக வெளியிடப்பட்ட தொகை மிகவும் சிறிய தொகை என்பதால், குறித்த விடயம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியிருந்ததுடன், பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்திருந்தன.

இவ்வாறானாதொரு பின்னணியில், அவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...