13 26
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் வேலையிழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்

Share

பிரித்தானியாவில் வேலையிழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்

பிரித்தானியாவின் (United Kingdom) மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் (NHS England) பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்களை பிரித்தானிய சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து NHS அமைப்பின் தலைவராக இருந்த அமண்டா பிரிச்சார்ட் (Amanda Pritchard), பிரித்தானிய சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் கொடுத்த அழுத்தம் காரணமாக பதவி விலகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு சர் ஜிம் மேக்கீ (Sir Jim Mackey) என்பவரை வெஸ் ஸ்ட்ரீட்டிங் நியமிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், NHS அமைப்பின் புதிய யுகத்தை உருவாக்க இருப்பதை இலக்காகக் கொண்டுள்ள வெஸ் ஸ்ட்ரீட்டிங், அதற்காக அந்த அமைப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இங்கிலாந்து NHS அமைப்பின் தலைவராக இருந்த அமண்டா பிரிச்சார்டைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை இழக்க இருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...