இலங்கைசெய்திகள்

பாதாள உலக தலைவரின் இறுதிச் சடங்கில் அநுர…! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Share
17 17
Share

மாகந்துரே மதுஷ்’ இன் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கலந்து கொண்டதாகக் கூறும் படத்தைப் பகிர்ந்த முகப்புத்தக கணக்கு குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம் பதில் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் கடந்த 2020.08.20ஆம் திகதி காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் என்று அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீட்டுத்திட்டமொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு மாகந்துரே மதுஷ் தகவல் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், அவரை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்ற போது காவல்துறைக்கும் பாதாளகுழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரன் ‘மாகந்துரே மதுஷ்’ இன் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டதாகக் கூறும் புகைப்படம் ஒன்று முகப்புத்தம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த படத்தை பகிர்ந்த முகப்புத்தக கணக்கு குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம், பதில் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தரங்க லக்மால் என்ற நபரால் இந்தப் படம் முகப்புத்தகத்தில் பரப்பப்பட்டதாகவும் அரசாங்கத தகவல் திணைக்களம் பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளதால், சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...