8 51
இலங்கைசெய்திகள்

தேங்காய் விலைக்கு விரைவில் தீர்வு:அமைச்சர் வெியிட்ட தகவல்

Share

தேங்காய் விலைக்கு விரைவில் தீர்வு:அமைச்சர் வெியிட்ட தகவல்

நாட்டு மக்களுக்கு சாதாரண விலைக்கு தேங்காயை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரசாங்கம் என்ற ரீதியில் தேங்காய் பிரச்சினையை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஊடாக சதோச நிறுவனத்திடம் ஒப்படைத்து இதற்கான தீர்வினைப் பெற உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் (25.02.2025) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தற்போது தேங்காயின் விலையானது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுப்பட்டுள்ளதை தாம் ஏற்றுக் கொள்வதாக நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

இந்தநிலையில், தற்போதைய தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக கம்பஹா மாவட்டத்தில் 2.5 மில்லியன் தென்னங்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த சிறப்பு தேங்காய் சாகுபடி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 3
செய்திகள்உலகம்

ஈரானின் அதிரடி பதிலடித் தாக்குதல்கள்: அண்டை நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான்...

02 2
உலகம்செய்திகள்

பெய்ரூட் மற்றும் டெஹ்ரான் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் லெபனான் தலைநகர் பெய்ரூட்...

01 2
உலகம்செய்திகள்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்திய கத்தார்: வான்வழித் தாக்குதல்களால் ராஜதந்திர உறவில் விரிசல்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில், ஈரானுடன் தற்போது எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை...

25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...