25 67b99b20cb050
இலங்கைசெய்திகள்

கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்

Share

கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை பகுதி கடையில் ஒருவரை சுட்டுக் கொல்ல ஒப்பந்தம் வழங்கியவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, குறித்த சம்பவத்தின் பின்னணியில் மோதர நிபுன என்ற நபர் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பதற்கு முன்பு கைதான சந்தேகநபர்கள் இருவரும் இந்த தகவலை வழங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை – கல்பொத்த சந்தியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தலவாக்கலையை சேர்ந்த சசிகுமார் எனும் நபர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகபர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வசமிருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து, சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்ளை காட்டச் சென்றபோது, ​​காவல்துறையினரின் துப்பாக்கிகளைப் பறித்து காவல்துறையினரை சுடுவதற்கு முயன்றுள்ளனர்.

இந்த நிலையில், விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், காயமடைந்த இரண்டு சந்தேக நபர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

மேலும், சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...

world 103
விளையாட்டுசெய்திகள்

மதீஷா பத்திரானா உடற்தகுதி தேர்வில் வெற்றி: கேகேஆர் அணியில் இணைய பச்சைக்கொடி!

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரானா, இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) நடத்திய...

world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...