25 67b309e47af16
இலங்கைசெய்திகள்

மன்னார் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பதவி விலகல்

Share

மன்னார் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பதவி விலகல்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தல் இன்றி பணியில் இருந்து விலகியதால் வைத்திய சேவை பாதிப்படைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் தமது குழந்தைகளுக்கு உரிய முறையில் வைத்திய சேவையினை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம்-07 மற்றும் பிரசவிக்கின்ற குழந்தைகளுக்கான விசேட சிறுபிள்ளை வைத்திய நிபுணர் கடமையாற்றி வந்த நிலையில் பணியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம் 7 இல் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான சிகிச்சைகள் தாமதம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட தமது குழந்தைகளை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ் விடயத்தில் வடமாகாண ஆளுநர் உடனடியாக தலையிட்டு குறித்த வைத்திய நிபுணருக்கு பதிலாக ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆஸாத் எம்.ஹனிபா வை தொடர்பு கொண்டு வினவிய போது, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சிறு பிள்ளைகளுக்கான வைத்திய நிபுணர் திடீரென கடமைக்கு சமூகமளிக்காது இருந்தார்.

அவர் தொடர்ச்சியாக கடமைக்கு வருகை தராத நிலையில் அவருடன் தொடர்பை ஏற்படுத்தினோம். எனினும் தான் வெளிநாடு செல்ல உள்ளதாகவும்,இதனால் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என தொலைபேசி வட்சப் ஊடாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்தவிடயம் தொடர்பாக நாங்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

இந்த நிலையில் தற்காலிகமாக வவுனியாவில் இருந்து ஒரு வைத்திய நிபுணரை கடமைக்கு அமர்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
mini
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சற்றுமுன் கைது!

  கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...

gold
இலங்கை

மீண்டும் மீண்டும் குறைவடையும் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் தங்க முதலீட்டாளர்கள்!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் சரிவடைந்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் 24 கரட் தங்கம்...

policeee
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்து வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள் – வெலிக்கடையில் இறுதி அஞ்சலி.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு...

dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...