25 67b1bb126c15b
இலங்கைசெய்திகள்

National Crush பட்டம் உதவுவதில்லை.. மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா

Share

National Crush பட்டம் உதவுவதில்லை.. மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா

இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக National Crush என மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் ராஷ்மிகா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “சினிமா துறையில் பட்டப் பெயர்கள் உதவுவதில்லை. அது மக்கள் நம் மீது வைத்த அன்பினால் கிடைப்பது.

அது வெறும் பெயர்கள் மட்டும் தான். நம் உழைப்பு தான் நல்ல இடத்தை மக்கள் மனதில் பெற்று கொடுக்கிறது. நான் 24 படங்களில் நடித்துள்ளேன்.

அதில், என்னை விட பல கதாநாயகிகள் அழகாக இருக்கிறார்கள். ஆனால், நான் என் பாதையில் செல்கிறேன். என் ரசிகர்களுக்காக நான் எதுவும் செய்ய தயாராக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...