14 19
உலகம்செய்திகள்

எலோன் மஸ்க் மீது பெண் எழுத்தாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

Share

எலோன் மஸ்க் மீது பெண் எழுத்தாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

தனக்கு பிறந்துள்ள குழந்தைக்கு தொழிலதிபர் எலோன் மஸ்க்(elon musk) தான் தந்தை என்று பிரபல பெண் எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர்(Ashley St. Clair) தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க், அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்பின்(donald trump) அரசு நிர்வாகத்தில் முக்கிய பாங்காற்றி வருகிறார்.தொழிலதிபராக திகழ்ந்து வரும் மஸ்க், தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், எழுத்தாளரும், பழமைவாத சிந்தனை கொண்டவருமான 31 வயதான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர், தனக்கு பிறந்துள்ள 5 மாதக் குழந்தைக்கு எலோன் மஸ்க் தான் தந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘5 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்றேன். என் குழந்தைக்கு எலோன் மஸ்க் தான் தந்தை. பாதுகாப்பு காரணமாக, இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் வெளியே சொல்லாமல் இருந்தேன்.

இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் கசிய தொடங்கியதால், தற்போது வெளியே சொல்ல முடிவு செய்தேன். எனது குழந்தை இயல்பான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம். ஊடகங்கள் எங்கள் குழந்தையின் தனியுரிமையை மதிக்க வேண்டும். தேவையில்லாத தகவல்களை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,’ இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்தப் பதிவுதொடர்பில் எலோன் மஸ்க் இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை.

எலோன் மஸ்க்கிற்கு மூன்று திருமணங்கள் நடந்தது. 12 குழந்தைகள் உள்ளனர். தற்போது பெண் எழுத்தாளரது குழந்தையும் எலோன் மஸ்க்கினது என்றால் அவருக்கு நான்கு மனைவியர் மூலம் 13 குழந்தைகள் உள்ளமை உறுதிப்படுத்தப்படும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...