12 20
இலங்கைசெய்திகள்

கனேடியப் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Share

கனேடியப் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

36 கோடி ரூபா பெறுமதியான ஹஷீஸ்” போதைப் பொருளுடன் கனேடிய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கனடாவின் டொரொண்டோ நகரத்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரம் வழியாக நேற்றிரவு நாட்டுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுங்க மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் பெற்றிருந்த சர்வதேச உளவுத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண், 36 வயதுடைய கனடிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெண் கடுமையாக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கனடிய பெண் பயணப்பையில் மறைத்து வைத்து, 36 கிலோ 500 கிராம் “ஹஷீஸ்” போதைப்பொருள் கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த “ஹஷீஸ்” போதைப்பொருள் தொகை வேறு நாட்டிற்கு மறுபரிவர்த்தனை செய்யும் நோக்குடன் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...