11 22
இலங்கைசெய்திகள்

அதிகாலையில் கடும் குளிரான வானிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

அதிகாலையில் கடும் குளிரான வானிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலையில் குளிரான வானிலை எதிர்பார்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், தீவின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரத்தில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...

qWa3tdNG
செய்திகள்உலகம்

ரேபிஸ் பரவுவதைத் தடுக்க ஜகார்த்தாவில் நாய், பூனை, வௌவால் இறைச்சிக்குத் தடை!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்,...