12 16
இலங்கைசெய்திகள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி : சிக்கினர் பெண்கள்

Share

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி : சிக்கினர் பெண்கள்

நுவரெலியா(nuwara eliya) கண்டி(kandy) பிரதான வீதியில் பம்பரகலை பகுதி மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று நேற்று (11) சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நுவரெலியா காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நுவரெலியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினர் குறித்த மசாஜ் நிலையத்தை சுற்றி வளைத்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 35 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் வெளிமடை, இரத்தினபுரி. கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் தடுத்து வைத்து தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...