26 1
உலகம்செய்திகள்

ஜேர்மனியின் National Visa-வில் மாற்றங்கள் அறிவிப்பு., 2025-ல் புதிய விதிமுறைகள் அமுல்

Share

ஜேர்மனியின் National Visa-வில் மாற்றங்கள் அறிவிப்பு., 2025-ல் புதிய விதிமுறைகள் அமுல்

ஜேர்மனியில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதிக்கும் நீண்ட கால விசா German National visa என்றும் D visa என்றும் அல்லது Long Stay Visa/long-term visa எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த நீண்ட கால விசாவிற்கான விதிமுறைகளில் ஜேர்மன் அரசாங்கம் 2025 முதல் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இந்த மாற்றங்கள் திறமையான தொழிலாளர்கள், மாணவர்கள், வேலை தேடுபவர்கள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வசதியாக மாற்றப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட நீண்டகால விசா பிரிவுகள்

இந்த ஆண்டு (2025) முதல், பின்வரும் பிரிவுகளில் நீண்டகால விசா வழங்கப்படுகிறது.

Employment & skilled work visa – வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கும், Skilled Immigration Act மூலம் தகுதி பெற்றவர்களுக்கும் நீண்டகால விசா வழங்கப்படும்.
Study & research – ஜேர்மன் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு அல்லது ஆய்வாளர்களாக சேர்ந்த மாணவர்களுக்கு நீண்டகால விசா வழங்கப்படும்.
Job seekers (Chancenkarte) – புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Opportunity card மூலம் ஒரு வருடத்திற்குள் வேலை தேட அனுமதி அளிக்கும் வகையில் நீண்டகால விசா வழங்கப்படும்.
Family reunification – ஜேர்மன் குடிமக்களின் குடும்பத்தினர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நீண்டகால விசா வழங்கப்படும்.
Business & freelancing – தொழில் தொடங்கவோ முதலீடு செய்யவோ விரும்புவோருக்கு நீண்டகால விசா வழங்கப்படும்.
Training & internships – தொழில்பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ளுபவர்களுக்கு நீண்டகால விசா வழங்கப்படும்.

நீண்டகால விசா விதிமுறைகளில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்:
Opportunity Card – Opportunity Card திட்டத்தின் கீழ் வேலை தேடுவதற்கான புதிய புள்ளிவிவர அடிப்படையில் விசா வழங்கப்பட்டு, ஒரு வருடம் வரை அனுமதி மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
EU blue card-ல் மாற்றம் – சம்பளத் தொகை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் ICT, மருத்துவம், பொறியியல் போன்ற பல்வேறு துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஓன்லைன் விண்ணப்பம் (Digitalization) – விண்ணப்பதாரர்கள் German Consular Services Portal மூலம் ஓன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள் அங்கீகார வசதி – தனிநபர்கள் இப்போது தங்கள் வெளிநாட்டு தகுதிகளை அங்கீகரிக்கும் செயல்முறையை முடிக்கும்போது ஜேர்மனியில் இருந்து செயல்பட அனுமதி.

வேலை வாய்ப்புகள் மற்றும் விசா தேவைகள்
வேலைவாய்ப்பு விசா (Employment visa) – நேரடி வேலை செய்யலாம்.
EU blue card – உயர் தகுதியான தொழிலாளர்கள் கட்டுப்பாடின்றி வேலை செய்யலாம்.
Opportunity Card – வேலை தேடுவோருக்கு பகுதி நேர வேலை அனுமதி.
மாணவர் விசா (Student visa) – வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்யலாம்.
Freelancer visa – self-employed தொழிலாளர்களுக்கு அனுமதி.
Job seeker visa – வேலை கிடைக்கும் வரை வேலை செய்ய அனுமதி இல்லை.

நீண்டகால விசாவிற்கு விண்ணப்பிக்கும் முறை

1 – விசா வகையை தெரிவு செய்யவும் : உங்கள் நோக்கத்திற்கேற்ப விசா வகையை தெரிவு செய்யுங்கள்.

2 – ஆவணங்களை தயாரிக்கவும்: பாஸ்போர்ட், பணி அனுமதி, கல்வி சான்றிதழ்கள் போன்றவை தேவை.

3 – நேர்காணல் சந்திப்பைத் திட்டமிடுங்கள்: அருகிலுள்ள ஜேர்மன் தூதரகத்தில் விசா சந்திப்பை பதிவு செய்யுங்கள்.

4 – நேர்காணலில் கலந்துகொள்ளுங்கள் – தேவையான தகவல்களை வழங்கி நேர்காணல் மேற்கொள்ளுங்கள்.

5 – விசா செயலாக்கம் – 6 முதல் 12 வாரங்களுக்கு இடையில் முடிக்கப்படும்.

விசா கட்டணம்

Standard Long Stay Visa – 75 யூரோ (Euro)

EU Blue Card – 110 யூரோ

Job Seeker Visa – 75 யூரோ

விண்ணப்பதாரர்கள் ஜேர்மனியில் தங்கியிருக்கும் காலத்தில் தங்களை ஆதரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த நிதி ஆதாரத்தையும் காட்ட வேண்டும்.

அந்தவகையில், வேலை தேடுபவர்கள் (job seekers) மாதம் 1,200 யூரோ (ஆண்டுக்கு 14,400 யூரோ) நிதி ஆதாரத்தை காட்ட வேண்டும்.

அதேபோல், மாணவர்கள் ஆண்டுக்கு 11,208 யூரோ நிதி ஆதாரத்தை காட்ட வேண்டும்.

ஜேர்மனி திறமையான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை ஈர்க்கும் நோக்கத்தில் 2025-ல் புதிய நீண்ட கால விசா மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
IMG 5872
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை: முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!

நுவரெலியா சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (14) காலை முதல் தொடர்ந்து கடுமையான மழையுடன் பனிமூட்டம் நிலவி...

download
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் கடலில் பெரும் போதைப்பொருள் வேட்டை! – 50 கிலோ ‘ஹஷிஷ்’ பறிமுதல்; இருவர் கைது!

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 50...

1698224062 NAMAL MEDIA 6 696x487 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலயவின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி? – ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோருகிறார் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உருவான ‘அரகலய’ (மக்களின் போராட்டம்) மற்றும்...

ms dhoni 2012 1200 1726388754
விளையாட்டுசெய்திகள்

தோனியின் பதவி விலகல் சொந்த முடிவு அல்ல? – பிசிசிஐ கொடுத்த அழுத்தம் குறித்து அம்பலமான உண்மை!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாகக் கருதப்படும் எம்.எஸ். தோனி, 2017-ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும்...