3 13
இலங்கைசெய்திகள்

சிங்கப்பூர் மாதிரியை இலங்கை ஏற்றுக்கொள்ள சிறிது காலம் எடுக்கும் என பிரதமர் தெரிவிப்பு

Share

சிங்கப்பூர் மாதிரியை இலங்கை ஏற்றுக்கொள்ள சிறிது காலம் எடுக்கும் என பிரதமர் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படும் சிங்கப்பூர் மாதிரியை  இலங்கை ஏற்றுக்கொள்ளவும், அரசியலை ஒரு கவர்ச்சிகரமான தொழிலாக மாற்றவும் சிறிது நேரம் எடுக்கும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

ஆளும் தேசிய மக்கள் சக்தி, அமைச்சர் பதவிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இந்த கருத்தை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான தனிநபர் தீர்மானத்தை இன்று(7) மன்றில் முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இலங்கை சிங்கப்பூர் மாதிரியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

அரசியலை ஒரு கவர்ச்சிகரமான தொழிலாக மாற்ற சிங்கப்பூர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிக சம்பளம் வழங்குகிறது.

மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவும் அதே மாதிரியைப் பின்பற்றுகின்றன. எனவே இலங்கையும் அதையே பின்பற்ற வேண்டும்.

இந்தத் தலைமுறையில் இலங்கை அதைச் செய்ய வேண்டும். அர்ப்பணிப்பின் மூலம் அதனை செய்ய முடியும் என்று ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த பிரேரணைக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை சிங்கப்பூர் மாதிரியை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் கலாசாரத்தை மாற்றுவதே தற்போதைய பணியாக இருப்பதால், 12 அல்லது 13வது நாடாளுமன்றத்தில் மட்டுமே, ரவி கருணாநாயக்கவின் கோரிக்கைகளை பரிசீலிக்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...