2 6
இலங்கைசெய்திகள்

அநுரகுமார மீதான மக்களின் நம்பிக்கை! சம்பிக்க ரணவக்க சாடல்

Share

ஜனாதிபதி அநுரகுமார மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை எள்றும், மாறாக மக்களை திசை திருப்பி விடும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுமு தொடர்பில் கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“சுதந்திரத்தின் பின்னரான 77 ஆண்டுகால வரலாற்றில் பல கலவரங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். இந்த பௌத்த பூமியில் மக்கள் விடுதலை முன்னணியும், விடுதலை புலிகள் அமைப்பும் ஆயுதமேந்தி போராடின.

இருப்பினும் இந்த நாட்டினதும், மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வந்தன.

அவர்களே நாட்டின் வளங்களை கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள். நாட்டின் இறையாண்மை சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கி, நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தேவைக்கேற்ப நாடு நிர்வகிக்கப்படுகிறது.

தேர்தல் காலத்தில் மாத்திரம் கொள்கைகளை வெளியிடாமல் உண்மையான கொள்கையுடன் செயற்பட வேண்டும்.

தேர்தல் காலத்தில் முன்வைக்கும் கொள்கைகள் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பொதுச் சட்டத்துக்கு இயைவானதாக காணப்பட வேண்டும்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,அவர்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

ஜனாதிபதி  மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக மக்களை திசைத்திருப்பி விடும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...