8 5
இலங்கைசெய்திகள்

2025 ரமழான் விசேட விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

2025 ரமழான் விசேட விடுமுறை தொடர்பில் விசேட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்கு குறித்த இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

1. ரமழான் மாதம், 2025 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகி 2025 ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி முடிவடைய உள்ளதால் இக் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மதவழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

2. ரமழான் மாதம், 2025 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகி 2025 ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி முடிவடைய உள்ளதால் இக் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மதவழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

03. இக்காலத்தின் போது அவ் உத்தயோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட விடுமுறை அங்கீகரிக்கப்படலாம்.

04. மேலும் ரமழான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தயோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்கத் தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...