12 1
இலங்கைசெய்திகள்

வாகனங்களின் விலை காலப்போக்கில் குறையும்- ஜனாதிபதியின் அறிவிப்பு

Share

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் விலை, ஆரம்பத்தில் அதிகமாக இருந்தாலும், காலப்போக்கில், வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார் .

வெளிநாட்டு இருப்புகளில் தாக்கம் ஏற்படுவதை கவனத்தில் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, இந்த முடிவு கவனமாக எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை டொலர் வீதத்தின் அதிகரிப்பு காரணமாக வாகன விலை அதிகமாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், வாகனங்களுக்கான தேவை திடீரென அதிகரித்தால் மற்றொரு நெருக்கடியை நாடு எதிர்கொள்ள முடியாது என்பதன் காரணமாகவே, சில வரிகளை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...