8 55
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு கடவுச்சீட்டை இணையவழியில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு

Share

வெளிநாட்டு கடவுச்சீட்டை இணையவழியில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு

வெளிநாடுகளிலுள்ள  இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை இணையம் ஊடாக விரைவாக மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் இணையம் ஊடாக விண்ணப்ப படிவம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்புவதும் விரல் அடையாளம் பெறுவதும் தூதரக காரியாலயங்களிலேயே மேற்கொள்ளப்படும்.

முதற்கட்ட நடவடிக்கையின் கீழ் 20 தூதரக காரியங்களில் இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஏனைய தூதரக காரியாலயங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் தொடர்பான சர்வதேச அமைப்புக்கும், துறைசார் அமைச்சரான விஜித்த ஹேரத்திற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் அமைச்சில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 213
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெதுரு ஓயா துயரம்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு – அனைத்து உடல்களும் மீட்பு!

குருநாகல், கோபேகானே பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமானவர்களில் எஞ்சியிருந்த...

world 212
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும்...

world 211
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூபவாஹினி கூட்டுத்தாபன முறைகேடு வழக்கு: சரத் கொங்கஹகே உள்ளிட்ட இருவருக்குப் பிணை!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதன்...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...