32
உலகம்செய்திகள்

ட்ரம்பால் ஏற்பட்டுள்ள பயம்… வெறிச்சோடிக்கிடக்கும் நகரமொன்றின் தெருக்கள்

Share

வெளியே வந்தால் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால், அமெரிக்க நகரமொன்றின் தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்பே தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறியிருந்தார்.

அதேபோல, அவர் பதவியேற்ற மறுநாளே, இல்லினாயிஸ் மாகாணத்திலுள்ள சிகாகோ நகரில் புலம்பெயர்தல் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தினார்கள், 956 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஆக, இப்போது சிகாகோவில் வாழும் புலம்பெயர்ந்தோர், அவர்கள் சட்டப்படி ஆவணங்களுடன் வாழ்ந்தாலும் சரி, ஆவணங்கள் இல்லையென்றாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்துடனேயே காணப்படுகிறார்கள்.

ஆகவே, அவர்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. அதனால், பல தெருக்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் காலியாக கிடக்கின்றன.

இந்நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்யும் சமுதாய மையம் ஒன்றின் வாசலில் ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில், புலம்பெயர்தல் அதிகாரிகள் வந்தால் என்ன செய்யவேண்டும் என சில ஆலோசனைகள் எழுதப்பட்டுள்ளன.

புலம்பெயர்தல் அதிகாரிகள் வந்தால் கதவைத் திறக்காதீர்கள், அமைதியாக இருங்கள், எந்த ஆவணத்திலும் கையெழுத்திடாதீர்கள் என்பது போன்ற விடயங்கள் எழுதப்பட்டுள்ளன.

வழக்கமாக திறந்திருக்கும் அந்த மையத்தின் கதவு, தற்போது மூடியே வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பணி செய்யும் தன்னார்வலர்கள், மையத்துக்கு காலையில் வந்ததும், முதல் வேலையாக எங்கேயாவது புலம்பெயர்தல் அதிகாரிகள் மறைந்திருக்கிறார்களா என கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுத்தான் வேலையையே துவங்குகிறார்கள்.

எங்களுக்குப் பயமாக இருக்கிறது, எங்கும் வதந்திகள் பரவிவருகின்றன, ஆகவே, எங்களைப் பிடித்து நாடுகடத்திவிடுவார்களோ என பயப்படுகிறோம், எங்களை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கிறோம் என்கிறார்கள் அந்த பகுதியில் வசிப்பவர்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...